செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை - கலெக்டர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை - கலெக்டர் அறிவிப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உலக நாடுகளில் இருந்த வீரர்கள் வர உள்ளனர். இதனால் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வர உள்ளது. இதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com