ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Published on

காரைக்கால்,

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காரைக்கால் அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைப் பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இதுகுறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com