தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொதுப் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை நீட்டிப்பு
Published on

சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று குறையத்தொடங்கியிருக்கும் நிலையில், 7 ஆம் தேதிக்கு பிறகு 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொதுப் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடகை வாகனங்கள், டேக்ஸி, ஆட்டோக்கள் பயணிகளின் இ-பதிவுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com