தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 11 மதுபான வகைகளை விற்கத் தடை

விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 11 மதுபான வகைகளை விற்கத் தடை
Published on

சென்னை,

டாஸ்மாக் கடைகளில் 10 பிராந்தி வகைகள், ஒரு ரம் வகை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சோதனையில் உறுதியான நிலையில் என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறுஉத்தரவு வரும் வரை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறும், தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று விநியோகஸ்தர்கள்/ மொத்த விற்பனையாளர்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டின் மேற்கூறிய 11 வகை மதுபானங்களை குடோனிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மதுபானங்கள்:-

1.VSOP EXSHAW GOLD BRANDY

2.LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY

3.Mc Dowells VSOP Brandy (Blended Brandy)

4.NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)

5.MENSCLUB Deluxe Brandy (Indian Brandy)

6.HONEY BEE FINE Brandy (Indian Brandy)

7.ENRICA VSOP SELECT BRANDY

8. ENRICA PLATINUM RESERVE XO BRANDY

9.ENRICA PREMIUM FRENCH BRANDY

10.VEERAN SPECIAL BRANDY

11.ENRICA OLD INDIE CLASSIC DARK RUM

X

Daily Thanthi
www.dailythanthi.com