கல்வராயன் மலை பெரியார் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை

கல்வராயன்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, பெரியார் அருவியில் செந்நிறத்தில் வெள்ள நீர் ஆபத்தான வேகத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
பெரியார் அருவியில் செந்நிறத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க  2-வது நாளாக தடை.
பெரியார் அருவி
Published on: 

சேலம்,

கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள புகழ்பெற்ற பெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, அருவியில் குளிப்பதற்கான தடை இன்று 2-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் பெரியார் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கல்வராயன்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பெரியார் அருவியில் செந்நிறத்தில் வெள்ள நீர் ஆபத்தான வேகத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே வெள்ளத்துடன் சேர்ந்து பாறைகள், மண் மற்றும் மரக்கட்டைகள் அடித்து வரப்படலாம்.

2-வது நாளாக தடை

பெரியார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறையினர் குளிப்பதற்கான தடையை இன்று 2-வது நாளாக நீட்டித்துள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அருவிப் பகுதியில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com