கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை


கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
x

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் திகழ்கிறது

திண்டுக்கல்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் திகழ்கிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை அழகை கண்டு கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் இருப்பதால் பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதியே சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story