மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை

மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள், வெளி நபர்கள் செல்ல 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை
Published on

நெல்லை,

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனரும், வன உயிரினக் காப்பாளருமான இளையராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு அவசியம் கருதியும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரையிலும் 3 நாட்களுக்கு சூழல் சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை தவிர்த்து வெளிநபர்கள் தனியார் வாகனங்களிலும், அரசு பஸ்களிலும் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com