வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
வாழைத்தார் விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்தவுடன் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர்.

நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி ரூ.450-க்கும், பச்சநாடன் ரூ.450-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.800-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை வாழைத்தார் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com