மேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூரில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிபராசக்தி மண்டபத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.
மேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார்
Published on

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி, டிசம்பர் 31-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை 4.30 மணி அளவில் உலக நன்மை வேண்டியும், இயற்கை வளம் செழிக்கவும் சித்தர் பீடம் வளாகத்தில் கலச விளக்கு, வேள்வி பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரவு 12 மணியளவில் மங்கல இசை வாசிக்கப்பட்டு புத்தாண்டை வரவேற்று ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த புத்தாண்டையொட்டி ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிபராசக்தி மண்டபத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், வக்கீல் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com