திருவொற்றியூரில் வங்கி உதவி மேலாளர் தற்கொலை

திருவொற்றியூரில் வங்கி உதவி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூரில் வங்கி உதவி மேலாளர் தற்கொலை
Published on

திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 30). இவர், தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். பிரவீன்குமார் தனது நண்பருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் பிரவீன்குமாரின் தாயார் அமுதா, தங்க நகை வாங்குவதற்காக மகனிடம் பணம் கேட்டார். ஆனால் பிரவீன்குமார் தனது நண்பருக்கு பணம் கொடுத்ததை தாயாரிடம் கூறினார். இதனால் பிரவீன்குமாருக்கும் அவரது தாயார் அமுதாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த பிரவீன்குமார் படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com