வங்கி கிளார்க் மற்றும் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 22–ந் தேதி தொடங்குகிறது

ஐ.பீ.பி.எஸ் நடத்தும் வங்கி கிளார்க் மற்றும் வங்கி உதவியாளர் எழுத்து தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது.
வங்கி கிளார்க் மற்றும் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 22–ந் தேதி தொடங்குகிறது
Published on

சென்னை,

இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐ.பீ.பி.எஸ்) மூலம் வங்கி கிளார்க் பணியிடத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு மற்றும் கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இத்தேர்வை எழுதலாம். இந்த தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களை www.ibps.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகிற 22ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 6ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3000 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3000ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 22ந் தேதி அன்று விடுதியில் நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் தங்களது புகைப்படம் ஒட்டி, பெயர், பின்கோடுடன் முகவரி மற்றும் தொலைபேசி எண், இ.மெயில், விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3000க்கான டிமான்ட் டிராப்ட் ( கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்628216 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 17ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04639242998 மற்றும் அலைபேசி எண்: 94420 55243, 86829 85148 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com