வங்கி கிளார்க் பணிக்கான தேர்வு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.
வங்கி கிளார்க் பணிக்கான தேர்வு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது
Published on

திருச்செந்தூர்,

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு www.ibps என்ற இணையதளத்தின் வழியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முழு தகவல்களையும் மேலே கொடுக்கப்பட்டு உள்ள இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 3-10-2017 ஆகும்.

பயிற்சி வகுப்புகள்

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லவோ, விடுப்பு எடுக்கவோ அனுமதியில்லை.

தங்கும் வசதி

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 2-11-2017 அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர...

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம், ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3,500-க்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம், -628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு...

பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 20-10-2017 ஆகும்.

பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com