வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

பொன்னமராவதி அருகே வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

வங்கி மேலாளர்

பொன்னமராவதி அருகே உள்ள கமலம் நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 40). இவர் பூலாங்குறிச்சியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கார்த்திகேயன் வழக்கம்போல் வங்கிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி கவுரி தனது மகளின் பள்ளியில் நடைபெற்றபட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கார்த்திகேயன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 14 கிராம் எடையுள்ள 3 ஜோடி தங்கத்தோடு, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பின்னர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சன்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com