

சென்னை,
மத்திய பட்ஜெட்டில் ஐ.டி.பி.ஐ. வங்கி முழுவதும் தனியார் வங்கியாக மாற்றப்படும். 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்.
காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி, எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதன்படி 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடக்க இருக்கிறது. அதன்பின் அடுத்த கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவல்களை அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்து உள்ளார்.