பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய வங்கி ஊழியர்கள் - தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம்

பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய விவகாரத்தில், தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய வங்கி ஊழியர்கள் - தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம்
Published on

திருவாரூர்,

மாதத் தவணை விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக கூறி தனியார் வங்கிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் தனியார் வங்கி உதவியுடன் இருசக்கர வாகனத்தை தவணை முறையில் எடுத்துள்ளார். 10 மாதங்கள் பணம் செலுத்திய நிலையில் குடும்ப சூழல் காரணமாக இரண்டு மாதங்கள் தவணைத் தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் கவிதாவின் வீட்டிற்குச் சென்று, அவரை தகாத முறையில் பேசியதுடன் இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்று வேறொரு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கவிதா நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் பேரில் விசாரணை செய்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாடிக்கையாளரிடம் தவறான வணிக நோக்கத்துடன் நடந்து கொண்டத்துடன் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறி தனியார் வங்கிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 566 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com