தண்ணீர் வரத்து அதிகரிப்பு:பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்க தடைஎச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

தண்ணீர் வரத்து அதிகரிப்பு:பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்க தடைஎச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
Published on

பள்ளிபாளையம்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு குளிக்க செல்வார்கள். தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் பள்ளிபாளையம் போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதாவது காவிரி கரையோர பகுதிகளான ஜனதா நகர், அக்ரஹாரம், ஆவத்திபாளையம், ஆவரங்காடு, பெரியார் நகர், வசந்த நகர், காவிரி ஆர்.எஸ். உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆற்றில் தண்ணீர் வரத்து மற்றும் ஆழம் அதிகமாக உள்ளதால் இங்கு பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com