வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை

பேராலயத்துக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
நாகை,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த நிலையில், திருவிழா தொடங்குவதையொட்டி வேளாங்கண்ணியில் உள்ள கடலில் நாளை முதல் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






