சண்டிகர் புறப்பட்ட பன்வாரிலால் புரோகித் - வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்

இன்று பஞ்சாப் புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர்.
சண்டிகர் புறப்பட்ட பன்வாரிலால் புரோகித் - வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்
Published on

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார். முன்னதாக பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

இன்று பஞ்சாப் புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் சென்னை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து சண்டிகர் புறப்பட்ட அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com