தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என் ஆனந்தை நேரில் சந்தித்த பி.ஏ.பி திட்டக்குழு தலைவர்

இந்த அரசு விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் நீர்வள துறை அமைச்சர் என் ஆனந்த் தெரிவித்தார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  என் ஆனந்தை நேரில் சந்தித்த பி.ஏ.பி திட்டக்குழு தலைவர்
Published on

சென்னை,

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டம் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுவை சேர்ந்த மெடிக்கல் கே பரமசிவம் (திட்ட குழு தலைவர்) தலைமையில் ப. அரூண் சி. நித்தியானந்தன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (22.05. 26 ) ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள துறை அமைச்சர் என் ஆனந்த் அவர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் தூர் வாருவதற்கு நிதி ஒதுக்குவது போலவே பிஏபி பாசனத்திற்கும் ஆண்டுதோறும் தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் என்றும் இதன் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் ( பி ஏ பி) விவசாயிகள் சந்தோஷம் அடைவார்கள்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் இதயமாக விளங்கும் காண்டூர் கால்வாயின் விடுபட்டு போன பகுதிகள் பரம்பிக்குளம் பிரதான கால்வாய் முழுவதும் மற்றும் மேற்கண்ட திட்டத்தில் உள்ள அனைத்து கிளை கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில் உள்ள ஷட்டர்கள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும்.

இதனால் ஏராளமான பாசநீர் விரயமாகி கடைமடை வரை தண்ணீர் சென்று சேருவதில்லை என்றும் மேலும் ஒரு சுற்று தண்ணீர் முடிவடைவதற்கு ஒரு மாத காலம் ஆகிறது என்றும் அதனால் எந்த விதமான பயிர்களையும் சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த காலங்களில் பலமுறை அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறி கோரிக்கை மனு அளித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக்கொண்ட அமைச்சர் இது தொடர்பாக ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவம் என்றென்றும் இந்த அரசு விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com