பரங்கிப்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டா.
பரங்கிப்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பரங்கிப்பேட்டை, 

மயிலாடுதுறை மாவட்டம் மல்லிக்கொல்லை வில்லியனூர் ரோட்டை சேர்ந்தவர் சேகர் மகன் சீலன்(வயது 27). இவர் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் துறைமுக பகுதியில் நடைபெறும் கட்டுமான பணியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் பரங்கிப்பேட்டை கீரைக்கார தெருவில் ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சீலன் பெற்றோரிடம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிய இருக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் எதிர்ப்பு தொவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சீலன், தான் தங்கியிருந்த வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சீலனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com