

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குறிஞ்சி நகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எங்களை அச்சுறுத்துவதற்காக இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றது. தோல்வி பயத்தில் இந்த சோதனை நடைபெற்றது. வேலூரை போல தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்திவிடலாம் என சதி நடைபெறுகிறது. தி.மு.க மீது அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது என்று கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஆதாரத்தின் அடிப்படையில் தான், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கவேண்டும் என தெரிவித்தார்.