அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிகலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனா.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிகலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
Published on

அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்கள் காலனியில் 150-க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு குடிநீர் வசதி இல்லாததால், 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். பல வீடுகளில் வயதானவர்கள் உள்ளதால், தண்ணீர் எடுத்துவர சிரமமாக உள்ளது. எனவே குழாய் மூலம் எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். எங்கள் வீடுகளுக்கு பட்டா இல்லாததால், அரசு சலுகை பெற முடியவில்லை. பட்டா கோரி விண்ணப்பித்தால், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டா வகையில் உள்ளதாக கூறுகின்றனர். மேலும் எங்கள் பகுதிக்கு சாலை, கழிவு நீர் வடிகால் வசதி, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com