அடிப்படை எழுத்தறிவு தேர்வு

அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.
அடிப்படை எழுத்தறிவு தேர்வு
Published on

புன்னம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத 20 பேரை கண்டறிந்து அவர்களுக்கு எழுத்தறிவு அடிப்படை மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க தன்னார்வலர்கள் மூலம் கடந்த 3 மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நடந்தது. இந்த தேர்வை 20 பேர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் எழுதினர். இத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர் ஆசிரியர்களும், தேர்வின் முதன்மை கண்காணிப்பாளராக பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் செயல்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com