அழகர்மலை நூபுரகங்கையில் வவ்வால் கூட்டம்

அழகர்மலை நூபுரகங்கையில் வவ்வால் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.
அழகர்மலை நூபுரகங்கையில் வவ்வால் கூட்டம்
Published on

அழகர்கோவில், 

மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை என்னும் வற்றாத புனித தீர்த்தகரை உள்ளது. இங்கு ராக்காயி அம்மன் அருள் பாலித்தது காண் டிருக்கிறார். இந்த தீர்த்த தொட்டியை சுற்றிலும் பல்வேறு மூலிகை மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்து பசுமையான இயற்கை எழில் நிறைந்து காணப்படுகிறது. எத்தனையோ வறட்சியான காலங்கள் வந்தாலும் இந்த வற்றாத நீரூற்றாக புனித தீர்த்தம் காலம் காலமாக வழிந்து கொண்டிருக்கிறது. இதில் இந்த தீர்த்த தொட்டியின் அருகில் மேற்கு பகுதியில் ராட்சத மரக்கிளைகளில் கனி தின்னும் வவ்வால் கூட்டம் பகலில் வந்து தங்கி விடுகிறது. இரவு நேரத்தில் இரை தேட சன்று விடுகிறது. ஆண்டுதோறும் குளிர் காலங்களில் மட்டும் அழகர் மலை பகுதியில் வவ்வால் கூட்டம் தங்கி செல்வது வழக்கமாக உள்ளது. கோடை காலங்களில் இந்த பறவைகளை பார்க்க முடியாது. அதன்படி தற்போது இந்த பறவை இனங்கள் மரக்கிளைகளில் தலைகீழாக தொங்கி சப்தத்துடன் அந்தரத்தில் தொங்குவதை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பார்த்து ரசித்து தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர். இந்த பறவைகளை வனத்துறை அதிகாரிகளும் கோவில் நிர்வாகத் தினரும் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com