குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Published on

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. பொதுவாக சீசன் காலங்களில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர்மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும் அவர்கள் பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குற்றால அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com