மேகமலை அருவியில் 5 மாதங்களாக குளிக்கத் தடை... சீரமைப்பு பணிகள் எப்போது முடியும்?

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேகமலை அருவி
Published on: 

தேனி,

மேகமலை அருவியில் சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் 5 மாதங்களாக குளிக்க தொடரும் தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேகமலை அருவி

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவிக்கு தேனி மட்டுமின்றி பல்வேறு

பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் மழைக்காலங்களில் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அருவியின் பாதுகாப்பு வேலிகள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக இந்த தடை நீடித்து வருகிறது.

பணிகள் பாதியில் நிறுத்தம்

சேதமடைந்த பாதுகாப்பு வேலிகள் மற்றும் படிக்கட்டுகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக அருவி பகுதியில் சீரமைப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com