குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. இதன் காரணமாக, குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com