சோழிங்கநல்லூரில் மின்சார மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து வீட்டில் தீ விபத்து

சோழிங்கநல்லூரில் மின்சார மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
சோழிங்கநல்லூரில் மின்சார மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து வீட்டில் தீ விபத்து
Published on

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 33). சமையல் வேலை செய்து வருகிறார். இவர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர், தனது மின்சாரமோட்டார் சைக்கிளின் பேட்டரியை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கி கொண்டு இருந்தார். திடீரென நள்ளிரவில் பேட்டரி வெடித்து சிதறி வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் மற்றும் துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் வீடு முழுவதும் பரவிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com