பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்: டிடிவி. தினகரன் வாழ்த்து

“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வீர வரிகளின் மூலம் மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டியர் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்: டிடிவி. தினகரன் வாழ்த்து
Published on

சென்னை,

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வீர வரிகளின் மூலம் மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டியவரும், தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவருமான புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என உரக்க முழங்கி தமிழாசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக என பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் இனிமையை எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்ப் பணியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com