பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது; கடைசி நாள் மே 30

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்கியது. #BECounselling
பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது; கடைசி நாள் மே 30
Published on

சென்னை,

பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 42 உதவி மையங்களில் இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக www.annauniv.edu/tnea2018 என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 30ந்தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற பிளஸ் டு மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் விண்ணப்பிக்கலாம். சி.பி.எஸ்.இ. பிளஸ் டு மாணவர்கள் தேர்வு முடிவு வரும் வரை விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 562 பொறியியல் கல்லூரிகளில் 2.6 லட்சம் இடங்கள் உள்ளன.

ஜூன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைன் கலந்தாய்வும் தொடங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com