தலமலை வனச்சாலையில் கரடி நடமாட்டம்

தலமலை வனச்சாலையில் கரடி நடமாட்டம்
தலமலை வனச்சாலையில் கரடி நடமாட்டம்
Published on

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு, தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நேற்று மதியம் கரடி ஒன்று நடமாடி வந்துள்ளது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தலமலை வனத்துறையினர் கூறும்போது, 'வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்' என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com