வயலில் மருந்து தெளித்ததால்மயங்கி விழுந்து விவசாயி சாவு

கூடலூரில் வயிலில் மருந்து தெளித்ததால் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
வயலில் மருந்து தெளித்ததால்மயங்கி விழுந்து விவசாயி சாவு
Published on

கூடலூர் 3-வது வார்டு மூணுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). விவசாயி. சம்பவத்தன்று இவர், கூடலூர் கப்பா மடை புலம் பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில், ஸ்பிரேயர் மூலம் பூச்சிமருந்து தெளித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபோது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து குணசேகரனின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குணசேகரனின் தந்தை வீரணன் கூடலூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com