

திருப்பூர்,
திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதி புதூர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கிளிஜோதிடம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பகலில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு ரமேஷ் சென்றார்.
அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ரமேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேசை சரமாரியாக வெட்டினார். இதில் ஜோதிடர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.