பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்; ஜூலை 18-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு


பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம்; ஜூலை 18-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு
x

பி.எட் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 21 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18-ந்தேதி வெளியாகிறது. கலந்தாய்வு ஜூலை 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு ஆணை ஜூலை 28-ந்தேதி நடைபெறும். ஆகஸ்ட் 6-ந்தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story