இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
x
தினத்தந்தி 8 July 2025 4:28 PM IST (Updated: 8 July 2025 4:31 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி, தாளமுத்துநகர், விவேகானந்தர் காலனி கடற்கரையில் இன்று (8.7.2025) அதிகாலையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அங்கே இலங்கைக்கு கடத்துவதற்காக டபுள் என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கியூ பிரிவு போலீசாரைக் கண்டதும் பீடி இலைகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பைபர் படகு மற்றும் மோட்டார் பைக் ஆகியவை சுங்கத்துறை வசம் ஒப்படைக்கபட உள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 40 லட்சம் ஆகும்.

1 More update

Next Story