சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு ரூ.2 கோடி வரை பேரம்...! சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சாத்தான்குளம் சம்பவம் வீடியோ தொடர்பாக தன்னிடம் ₹2 கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் என்று பாடகி சுசித்ரா டுவீட் செய்துள்ளார்.
சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு ரூ.2 கோடி வரை பேரம்...! சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Published on

சென்னை

சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இணையத்தில் ஹேஷ்டேக் டிரெண்டானது

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்தரா தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதுமட்டுமின்றி சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். பாடகி சுசித்தராவின் வீடியோ மற்றும் கருத்துகள் ஆங்கில ஊடங்களிலும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என்றும் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

பாடகி சுசித்ராவின் டுவீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முந்தைய ஆட்சியில் (எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது) போலீஸ் அட்டூழியங்களை முன்னிலைப்படுத்தும் வீடியோவுக்கு ரூ. 2 கோடி பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து தூக்கத்தை இழந்தேன். சத்தான்குளம் சம்பவத்தை விட குறைவானதாக இல்லை.கவனம் செலுத்துங்கள்

என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com