மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் தேனீக்கள்

தஞ்சையில் அங்கன்வாடி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்
Published on

தஞ்சையில் அங்கன்வாடி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

அங்கன்வாடி மையம்

தஞ்சை அரசு சுற்றுலா மாளிகை பின்புறம் ரெசிடன்ட் பங்களா அருகே அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும், அதன் அருகே மகளிர் விடுதி, வீடுகள், விளையாட்டு மைதானமும் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் எப்போதும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் வசதிக்காக 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது.

தேனீக்கள்

இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் 2 பிரமாண்ட தேன் கூடுகளை தேனீக்கள் கட்டி உள்ளன. இவை அவ்வபோது பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களும் தேனீக்களால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் கூடு கட்டி உள்ள தேனீக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com