"அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?" - அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா என, அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?" - அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

சென்னை,

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. தங்கமணி!

'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி! அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?

எண்ணித்துணிக கருமம் என அ.தி.மு.க அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com