

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினா நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏராளமான காலிப் பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஊழியாகளை தினக்கூலி அடிப்படையில் பணியமாத்த போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன குழு உறுப்பினர் தோழர் சங்கிலி பூதத்தான், செயலாளர் சிவசுப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.