பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகள்

சம்பளம் வழங்காததால் பேரூராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையிட்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகள்
Published on

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்டது பூவம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் சரிவர வருவதில்லை எனவும், ஒரு சில பேருக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரூராட்சி தலைவர் சௌந்தர பிரியா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர்களுக்கு சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com