தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதாவால் ஏற்பட கூடிய பலன்கள்

தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதாவால் ஏற்பட கூடிய பலன்களை பற்றி காண்போம்.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதாவால் ஏற்பட கூடிய பலன்கள்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா இன்று நிறைவேறியது. இதனால், இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் வேளாண்மையை பாதிக்க கூடிய எந்த தொழிற்சாலைகளையும் தொடங்க அனுமதி கிடையாது. அரசு மானியம், சலுகைகள், கடனுதவி உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை தொழில், மீன் வளர்ப்பு போன்றவற்றிற்கு பதப்படுத்துதல், கொள்முதல், சேமிப்பு கிடங்குகள், வர்த்தக வளாகம் அமைக்கப்படும். வேளாண் நீங்கலான மற்ற தொழில்கள் பெருமளவில் தவிர்க்கப்படும். விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளையே அமைக்க முடியும்.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற இயலாது. எண்ணெய், எரிவாயு திட்டங்களை செயல்படுத்த முடியாது. இதேபோன்று அதிக மாசுகளை ஏற்படுத்தும் ஆலைகளை அமைக்க முடியாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com