

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பீகார் மாநிலம் டானாபூரில் இருந்து புறப்பட்டு பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.03251), நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் வருகிற மார்ச் 4-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக டானாபூர் செல்லும் சிறப்பு ரெயில் (03252), வருகிற 27-ந்தேதி முதல் வருகிற மார்ச் 6-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.