

திருச்சி,
திருச்சி-பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 21 மற்றும் 28-ந்தேதி களில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண்:06007) ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (எண்:06008) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.