சிறந்த அரசு அலுவலர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரசு அலுவலகங்களில் புதிய யுத்திகளை கையாண்ட சிறந்த அரசு அலுவலர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த அரசு அலுவலர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழக அரசு 2023-ம் ஆண்டு சுதந்திரதின விழாவின் போது, அரசு அலுவலகங்களில் புதிய யுத்திகளை கையாண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறந்த பயிற்சி விருது-2023 வழங்கி கவுரவிக்க உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய வகையான யுத்திகளை கையாண்டு வெற்றி பெற்று, நல்லாட்சியின் நீடித்த தரமான வளர்ச்சியை மேம்படுத்திய அலுவலர்கள், அமைப்புகள், நிறுவனங்களுக்கு சிறந்த பயிற்சி விருது வழங்கப்பட உள்ளது.

ஆகையால் விருது பெற தகுதி உடையவர்கள் தாங்கள் புரிந்த சாதனைகள் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துரு தயார் செய்து 10.7.23 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com