ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதி, தொழில் சார்ந்த உபகரணங்களை இறைவனின் திருவடியில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகவும், தீமையை எதிர்த்து பத்து தினங்கள் போராடி துர்கா தேவி பெற்ற வெற்றித் திருநாள் விஜயதசமியாகவும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜயதசமி தினத்தன்று நாம் தொடங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையோடு புதிய சாதனைகள் படைப்பதற்கான பணிகளை இந்நாளில் தொடங்கிடுவோம். தீய சக்தியை அழித்து துர்கா தேவி பெற்ற வெற்றியைக் குறிக்கும் இந்த தினத்தில் மக்களின் எண்ணங்கள் யாவும் ஈடேறவும், தொழிலில் முன்னேற்றங்கள் காணவும், இறைவன் அருள் புரியட்டும்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் விளங்க மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com