

கோவை,
வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாரு அதில் தெரிவித்துள்ளார்.