வரத்துக்குறைவால் வெற்றிலை விலை உயர்வு

வரத்துக்குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
வரத்துக்குறைவால் வெற்றிலை விலை உயர்வு
Published on

 நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கு விற்றது நேற்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்றது ரூ.5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4,500-க்கு விற்றது ரூ.ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கு விற்றது ரூ.2,500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com