உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு

உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்ந்தது.
உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு
Published on

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சர்ந்த விவசாயிகள் வெற்றிலையை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். கூலியாட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். இதனை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசியேசன் வெற்றிலை மண்டிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2,500-க்கும் வாங்கி சென்றனர். நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3,500-க்கும் வாங்கி சென்றனர். வெற்றிலை வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com