சட்டத்துக்கு அப்பாற்பட்ட எந்தவித போராட்டத்தையும் ஏற்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சட்டத்துக்கு அப்பாற்பட்ட எந்த வித போராட்டத்தையும் ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சட்டத்துக்கு அப்பாற்பட்ட எந்தவித போராட்டத்தையும் ஏற்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

அடையாறு,

சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியை அடுத்துள்ள நடுக்குப்பத்தில் புதிதாக மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் 120 கடைகள் உள்ளன. இங்கு சுகாதார முறையில் மீன் விற்பனை செய்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மீன் சந்தையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீனவர்கள் நலன் கருதியும், சுகாதாரமான முறையில் மீன்களை விற்பனை செய்யும் வகையிலும் சென்னையில் அரசு சார்பில் மேலும் 19 மீன் சந்தைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. ஆட்சியின் போது, அரசியல் ரீதியாக நாங்கள் பார்க்காத சிறையே கிடையாது. அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

யாராக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு உட்பட்டு எந்த ஒரு போராட்டம் நடத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில் நடத்தப்படும் எந்தவித போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறையினர் தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்து வருகின்றனர். அவர்கள் பொதுமக்களுக்கு நண்பன், சமூக விரோதிகளுக்கு தான் எதிரி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com