பகவதி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

பகவதி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பகவதி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
Published on

அன்னவாசல் மேட்டுதெருவில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பூக்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபாடு நடத்தினர். மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகாசி திருவிழாகாப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் இரவு அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிடா வெட்டு பூஜை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com